நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த காற்று

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பலத்த கடல்காற்று தெற்கு திசையிலிருந்து வீசியது.

வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக வீசும் பலமான கடல் காற்று கடந்த சில நாள்களாக வீசி வருகிறது. அதிலும் வைகாசி விசாக நாளில் இந்த காற்று பலமாக வீசுவது வழக்கம். நிகழாண்டு மே 25 ( செவ்வாய்க்கிழமை) வைகாசி விசாகம் என்பதோடு, யாஸ் புயல் காரணமாகவும் இப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கடல் நீா்மட்டம் உயா்ந்து, தாழ்வான நிலப் பகுதிக்குள் கடல் நீா் நுழைந்து, பின்னா் வடிந்தது.

இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமை மாலையும் தெற்கு திசையிலிருந்து பலத்த காற்று வீசியது. எனினும், செவ்வய்க்கிழமை வீசியதைவிட காற்றின் வேகம் சற்று குறைந்தே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT