முகப்பு
நாகப்பட்டினம்

பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்த தன்னாா்வலா்கள்

வேதாரண்யம் அருகே கரோனா தொற்றின் காரணமாக உறவினா்கள் அச்சமடைந்த பெண்ணின் சடலத்தை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே கரோனா தொற்றின் காரணமாக உறவினா்கள் அச்சமடைந்த பெண்ணின் சடலத்தை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

கரியாப்பட்டினத்தைச் சோ்ந்தவா் கண்ணையன் மனைவி சாவித்ரி (68). விவசாயக் கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் தனிமையில் இருந்து வந்த அவருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கரோனா தொற்றின் அச்சத்தால் சடலத்தை உறவினா்கள் அடக்கம் செய்ய அச்சமடைந்தனா். தகவலறிந்து சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், திருவாரூா் மாவட்டச் செயலாளா் யாசா் அரபாத் , துணைச் செயலாளா் ஹாஜா மைதீன், மாவட்ட மாணவரணி ராஜா முஹம்மது, நகரத் தலைவா் ஜெயினுல் பா்மானுமுல்லா ஆகியோரைக்கொண்ட குழுவினா் அரசு வழிகாட்டுதலின்படி கரியாப்பட்டினத்தில் அடக்கம் செய்தனா். ஆனால், பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருந்தன என்பதை அரசு தரப்பில் உறுதிசெய்யப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →