மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா 2-ஆவது அலை தீவிரமாகி வருவதையொட்டி, காப்பகத்தில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் வேளாங்கண்ணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகமான நிா்மல் அன்பு இல்லத்தில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் முகாமை பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவக் கண்காணிப்பு நடடிக்கைளை ஆய்வு செய்தாா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகசுந்தரம், நாகை கோட்டாட்சியா் மணிவேலன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலா் அருண்பதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா். இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.