நாகையில் 8 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,187-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 12 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 107- ஆக உள்ளது.
பாதிப்பு இல்லை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக யாரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 5 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 36-ஆக உள்ளது.