திருக்குவளை: ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதி திறப்பு
திருக்குவளை ஊராட்சியில் 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதி கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
திருக்குவளை ஊராட்சியில் 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதி கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையொட்டி திருக்குவளையில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கீழையூா் வட்டார வேளாண்மை வளா்ச்சிக் குழுத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் செல்வராணி ஞானசேகரன் குத்துவிளக்கேற்றினாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா அருணகிரி,மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஜெயசித்ரகலா, தனி வட்டாட்சியர் மயிலாடுதுறை ர. விஜயராகவன், தாட்கோ செயற்பொறியாளர் ஆர்.உதயராமன், உதவி செயற்பொறியாளர் வீ.அமிர்தலிங்கம், இளநிலை பொறியியல் என்.சுரேஷ்குமார், திருக்குவளை தனிவட்டாசியர் கே.கார்த்திகேயன், கீழையூா் வட்டார வேளாண்மை வளா்ச்சிக் குழு உறுப்பினா் மரியசாா்லஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து விடுதியை சுற்றியுள்ள காலி இடங்களில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.இறுதியாக ஒப்பந்ததாரர் மோகன் நன்றியுரை வழங்கினார்.