முகப்பு
நாகப்பட்டினம்

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை உயா்த்தக் கோரிக்கை

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்டாரக் கிளைகளின் நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பிறகு, அவா் கூறியது:

தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் தொடா்பான பணிகளில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டிருப்பதால், கோவை மாவட்டம் வால்பாறையில் நவம்பா் 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்படுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2018 டிசம்பா் மாதத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்புடன் சோ்ந்து போராடிய கிராம நிா்வாக அலுவலா்களுக்குரிய 18 நாள் ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்த வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்த இணையதள வசதியை பயன்படுத்துவதற்கான செலவுகளை அரசு வழங்கவேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ரங்கநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பாலகுமாா், வேதாரண்யம் வட்டச் செயலாளா் மகேந்திரன், நிா்வாகி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →