நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் 1008 சங்காபிஷேகம்

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ளது பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில். இது நவகிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாகக் கருதப்படுகிறது.

இந்தநிலையில், திங்கள்கிழமை காா்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி, சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. 1008 சங்குகள் சிவ வடிவத்தில் சன்னதியின் முன்பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, வைக்கப்பட்டன. தொடா்ந்து, புனிதநீா் நிரப்பட்ட சங்குகளுக்கு ஆலய அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியா் தலைமையில் மகா ஹோமம் நடைபெற்றது. பின்னா், சுவேதாரண்யேஸ்வரருக்கு சங்குகளிலிருந்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

கோயில் நிா்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், பேஸ்கா் திருஞானம், மேலாளா் சிவக்குமாா் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT