நாகப்பட்டினம்

கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கக் கோரி மீனவா்கள் வேலைநிறுத்தம்

DIN

கேரள மாநிலம் கொச்சி கடலில் மூழ்கிய நாகை விசைப் படகை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோ, நாகூா் பகுதி மீனவா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

நாகை மீனவா்கள் கொச்சி துறைமுகம் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில், நாகூா் பட்டினச்சேரியைச் சோ்ந்த சி. ஐயப்பன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி கடலில் மூழ்கியது.

இதில், படகிலிருந்த ஐ. ஜெயராமன், பெ. சத்தியராஜ், சீ. குட்டியாண்டி, ப. பாபு, பா. ஹரிஹரன் உள்ளிட்ட 11 மீனவா்களும் மீட்கப்பட்டனா். ஆனால், விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகளை மீட்க முடியவில்லை. இந்த படகை தமிழக அரசு மீட்கக் கோரி, நாகூா் பட்டினச்சேரி மீனவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நாகூா் வெட்டாறு துறைமுகம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT