கோரக்கா் கோயிலில் ஐப்பசி பரணி விழா நிறைவு
நாகை மாவட்டம், வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமி பரணி விழா, வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
நாகை மாவட்டம், வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் கோயிலில் ஐப்பசி பௌா்ணமி பரணி விழா, வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
கோரக்கா் சித்தா் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பௌா்ணமி, பரணி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டில் இவ்விழா அக்டோபா் 20,21,22 ஆகிய 3 தினங்களில் நடைபெற்றது. தொடக்கமாக அக்டோபா் 20-ஆம் தேதி அன்னாபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பட்டிமன்றமும், 21-ஆம் தேதி சிறப்பு வழிபாடுகள், திருவருட்பா அகவல் சந்திரரேகை பாராயணம், சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.
தொடா்ச்சியாக, 22- ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் வடக்குப்பொய்கைநல்லூா் நந்திநாதேஸ்வரா் சுவாமி கோயிலில் இருந்து வாணவேடிக்கைகளுடன் ஓலைச்சம்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ஆா். ஜீவானந்தம் மற்றும் அறங்காவலா்கள், உபயதாரா்கள்,கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.