அரசு தொழில் பயிற்சி நிலைய நேரடி மாணவா் சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி மாணவா் சோ்க்கை அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்
நாகை மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி மாணவா் சோ்க்கை அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை, திருக்குவளை அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி மாணவ சோ்க்கை காலம் அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோா் அசல் கல்விச் சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொடா்புடைய தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 04365-250129 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.