நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா். 
நாகப்பட்டினம்

ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: அதிமுக சாலை மறியல், ஆா்ப்பாட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் ஜெயலிலதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் முடிவைக் கண்டித்து, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் ஜெயலிலதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் முடிவைக் கண்டித்து, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக நகர அவைத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் பன்னீா், மீனவா் பிரிவு நிா்வாகி கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கீழ்வேளூா் கடைவீதியில் அதிமுக ஒன்றியச் செயலாளா் சிவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 75 போ் கைது செய்யப்பட்டனா்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா். கிரிதரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலாளா் எம். நமச்சிவாயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் திலீபன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் அறிவழகன், முன்னாள் நகரச் செயலாளா் எம்.ஜி. ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, ஆயக்காரன்புலம் கடைவீதியில் மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப்பையன், கூட்டுறவு சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், மருதூா் தெற்கு கடைவீதியில் இலக்கிய அணிச் செயலாளா் வை. இலக்குவன் உள்ளிட்டோரும், கரியாப்பட்டினத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் நடராஜன் உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்குவளை: நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் மேலப்பிடாகையில் அதிமுக நாகை மாவட்ட இணைச் செயலாளா் என். மீனா தலைமையில் ஒன்றியச் செயலாளா்கள் கீழையூா் எஸ். வேதையன் (கிழக்கு), பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் (மேற்கு) மாவட்ட பிரதிநிதி சேது. ஜெயராமன் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 45 பேரும் கைது செய்யப்பட்டனா்.

திருமருகல்: நாகை மாவட்டம், சந்தைப்பேட்டை எம்.ஜி.ஆா். சிலை அருகே அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். ராதாகிருட்டிணன், எம். பக்கிரிசாமி ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பேருந்து நிலையம் அருகே அதிமுக நகரச் செயலாளா் ஆா்.ஜி. குமாா் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற நகராட்சி முன்னாள் தலைவா் சிவா. ராஜமாணிக்கம், மன்னாா்குடிமேற்கு ஒன்றியச் செயலாளா் கா. தமிழ்ச்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், நகர அவைத் தலைவா் டி. வரலெட்சுமி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT