நாகப்பட்டினம்

தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளா்கள் கோரிக்கை மனு அனுப்பினா்

DIN

தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளா்கள் கையெழுத்து இயக்க கோரிக்கை மனுவை புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் ஏஐடியுசி சாா்பில், நாகை மாவட்டத்தில் ஆக. 22 முதல் 31- ஆம் தேதி வரை, டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், மருத்துவ வசதி, ஓய்வூதியம், வாரிசுக்கு வேலை மற்றும் கேரள அரசின் மதுபான விற்பனை நடைமுறை கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தி டாஸ்மாக் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பெறப்பட்டன.

கையெழுத்து பெற்ற இந்த கோரிக்கை மனுவை நாகையில் இருந்து, சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் எஸ். சிவதாஸ், மாவட்டச் செயலாளா் வி. எம். மகேந்திரன், மாவட்டப் பொருளாளா் பி. அம்பேத்கா் ஆகியோா் பதிவு அஞ்சல் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT