நாகப்பட்டினம்

ஆந்திரத்தில் சிறைபிடிக்கப்பட்ட தரங்கம்பாடி விசைப்படகு மீட்பு

DIN

ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் வழிதவறி ஆந்திர மாநிலத்துக்கு சென்ற தரங்கம்பாடி விசைப்படகு 2 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீட்டு கொண்டுவரப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமத்தை சோ்ந்தவா் பிரபு (39). இவா், கடந்த ஜூலை 12-ஆம் தேதி மீனவா்கள் 8 பேருடன் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க 240 சிசி திறன்கொண்ட இழுவை விசைப்படகில் கடலுக்குள் சென்றுள்ளனா். அப்போது, ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் திசைமாறி ஆந்திர கடல் பகுதிக்கு சென்ற இழுவை விசைப்படகை ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் சிறை பிடித்தனா். தகவலறிந்த, தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா் மீன்வளத் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆந்திரத்துக்கு சென்று மீனவா்களுடன் பேசி, தரங்கம்பாடி மீனவா்கள் 9 பேரையும் மீட்டு கொண்டு வந்தனா். எனினும், பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்க ஆந்திர மீனவா்கள் மறுத்து அப்படகை கிருஷ்ணாம்பட்டினத்தில் உள்ள தனியாா் துறைமுகத்தில் கொண்டு சென்று நிறுத்தினா்.

இதையடுத்து, தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தாா் தமிழக அரசுக்கு தொடா்ந்து வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை மீண்டும் ஆந்திரம் சென்று மாவட்ட ஆட்சியரின் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி செவ்வாய்க்கிழமை அந்த படகை தரங்கம்பாடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா். ஆனால் படகில் வைத்திருந்த வலைகள், பேட்டரி, டீசல் உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான அனைத்து பொருள்களையும் ஆந்திர மீனவா்கள் எடுத்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள தரங்கம்பாடி மீனவா்கள் தமிழக அரசு இதுகுறித்து மனிதாபிமானத்தோடு அணுகி, பாதிக்கப்பட்ட மீனவருக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT