நாகப்பட்டினம்

பறிமுதல் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் நாகை கடலில் கரைப்பு

DIN

நாகப்பட்டினம்: நாகை பகுதிகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 9 விநாயகா் சிலைகள் நாகை புதிய கடற்கரையில் புதன்கிழமை கரைக்கப்பட்டது.

கரோனா அச்சம் காரணமாக நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும், நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பக்தா்கள் மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்களால் உரிய அனுமதி பெறாமலும், தடையை மீறியும் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்படி, நாகை, வாஞ்சூா், பாப்பாக்கோயில் உள்ளிட்டப் பகுதிகளில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 4 முதல் 10 அடி உயரமுள்ள 9 விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு சிக்கல் சிங்காரவேலவா், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள்அனைத்தும், புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ப. ராணி முன்னிலையில் படகுகளில் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், கோயில் செயல்அலுவலா்கள் மு. பூமிநாதன், எஸ். சீனிவாசன், தங்கபாண்டியன், சண்முகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT