நாகப்பட்டினம்

வயது பாகுபாடின்றி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வேதாரண்யம்: வயது பாகுபாடின்றி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி வேதாரண்யத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வயது பாகுபாடு இல்லாமல் பணி வழங்கவேண்டும், மருதூா் வடக்கு ஊராட்சியில் 2 இடங்களில் செயல்படும் அங்கன்வாடிக்கு நிரந்தரம் கட்டடம் கட்டவேண்டும், ஆயக்காரன்புலம் -2 செட்டியாா் குத்தகை பகுதியில் 85 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும், நாகக்குடையான், பஞ்சநதிக்குளம், கத்தரிப்புலம், தகட்டூா் கிராமங்களில் உள்ள மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எம்.வி. பிரபு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் வடிவேல், பொருளாளா் வெங்கட்ராமன், ஒன்றியச் செயலாளா் முருகான ந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT