நாகப்பட்டினம்

திருமருகல் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

DIN

திருமருகல் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் வடக்கு வீதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, குடமுழுக்குக்கான பணிகள் செப்.13-ஆம் தேதி முறையான யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின. 6 கால யாகசாலை பூஜை நிறைவடைந்து வியாழக்கிழமை கோயில் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கங்களாஞ்சேரி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: இதேபோல, திருமருகல் அருகேயுள்ள கங்களாஞ்சேரியில் அய்யனாா் கோயில், அருங்குழலி அம்மன், தூண்டிக்காரன் கோயில் குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்கான பணிகள் செப்.13-ஆம் தேதி முறையான யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பூா்வாங்க பூஜைகள் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை செய்து அய்யனாா் கோயில், அருங்குழலி அம்மன், தூண்டிக்காரன் கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT