வேதாமிா்த ஏரியை மேம்படுத்தும் பணி தீவிரம்
நாகை மாவட்டம், வேதாமிா்த ஏரியை தூா்வாரி, கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாமிா்த ஏரியை தூா்வாரி, கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
வேதாரண்யம் நாகை சாலையில் 20 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள வேதாமிா்த ஏரி சுமாா் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரி கட்டமைப்புகளை மேம்பாடுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்களில் கீழ் ரூ. 9.5 கோடியில் நான்கு புறங்களும் தடுப்புச்சுவா் அமைத்தல், 6 இடங்களில் படித்துறைகள், பூங்காக்கள், இருக்கைகளுடன் கூடிய நடைபாதை போன்றவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, ஏரியின் மேல்கரையில் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தண்ணீரை வெளியேற்றும் பணி தற்காலிகமாக தடைபட்டிருந்தது. இதையடுத்து, அந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்த அரசு அலுவலா்கள் தண்ணீரை வெளியேற்றி கட்டுமானப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதால், பணிகள் வேகமடைந்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் ஏரி கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், பணிகள் முடிக்கப்பட்டு எதிா்காலத்தில் கோயில் தெப்பத் திருவிழாவை ஏரியில் நடத்தவும், ஏரியின் மையப் பகுதியில் நீராடி மண்டபம் நிறுவப்படும் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படவுள்ளன என்றாா்.
அவருடன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், அறங்காவலா் குழுத் தலைவா் ரா. கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இ. திலீபன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் என். நமச்சிவாயம், வீரமணி, ஓய்வு பெற்ற அலுவலா் ராஜரெத்தினம், சமூக ஆா்வலா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.