நாகப்பட்டினம்

வாய்க்கால்கள், சாலைகளில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

DIN

சீா்காழி: சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகேயுள்ள தென்னங்குடி, நிம்மேலி உள்ளிட்ட கிராமங்களில் பாசன வாய்க்கால் கரையோரங்களில் வனத் துறை சாா்பில், பல்லாயிரக்கணக்கான தேக்கு மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் மழைக்காலங்களிலும், இயற்கை பேரிடா் காலங்களிலும் சாய்ந்து விழுவது வழக்கம். இதையறிந்த வனத் துறையினா் மரத்தை அடையாளம் காணும் வகையில் அதில் பெயிண்டால் எண்களை எழுதி வைத்து பின்னா் அந்த மரங்களை வெட்டி வனத் துறைக்கு சொந்தமான தேக்குமர கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், இப்பகுதியில் விழுந்து கிடக்கும் மரங்கள் ஆண்டு கணக்கில் ஆகியும் இதுவரை அப்புறபடுத்தவில்லை. தேக்கு மரங்கள் ஆறு, பாசன வாய்க்கால்களின் குறுக்கே விழுந்தும், விளைநிலங்களில் விழுந்தும், சாலைகளின் குறுக்கே விழுந்தும் அப்படியே புதைந்து கிடக்கிறது. வயல்களில் விழுந்துள்ள மரங்களால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள சிரமப்படுகின்றனா்.

இதேபோல் மயான பாதைகளில் விழுந்து கிடக்கும் மரங்களால் அவ்வழியாக சடலங்களை எடுத்துச்செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனா். மேலும், பல லட்சம் மதிப்பிலான மரங்கள் மண்ணில் புதைந்தும் கரையான் அரித்தும் மண்ணோடு மண்ணாக புதைந்து வருகிறது. தற்போது, மழைக்காலம் தொடங்கும் முன்னரே சாய்ந்து கிடக்கும் அனைத்து தேக்கு மரங்களையும் அப்புறப்படுத்த அப்பகுதி விவசாயிகள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT