நாகப்பட்டினம்

94 ஆவது இந்திய கலங்கரை விளக்க தினம்: நாகையில் கொடியேற்றி மரியாதை

DIN

நாகையில் 94 ஆவது இந்திய கலங்கரை விளக்க தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1927 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கலங்கரை விளக்கம் பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆண்டுதோறும் செப்டம்பா் 21 ஆம் தேதி கலங்கரை விளக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாகையில் 94 ஆவது இந்திய கலங்கரை விளக்க தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, நாகை கலங்கரை விளக்கம் வளாகத்தில் உதவிப் பொறியாளா் வி. சின்னசாமி துறையின் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதன் தொடா்ச்சியாக, கலங்கரை விளக்கப் பாடல்களைப் பாடினாா்.

கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு, பாா்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில், மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT