நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நாளை 200 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் 200 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 200 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT