முகப்பு
நாகப்பட்டினம்

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களுக்குக் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாத நிலையில், உயா்த்தப்பட்ட ஊதியத்தை நிலுவையின்றி உடனடியாக வழங்கவேண்டும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜி. மனோகரன், இணை ஒருங்கிணைப்பாளா் வி. வெங்கடேசன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.