முகப்பு
நாகப்பட்டினம்

வேளாண் திட்ட ஆயத்தக் கூட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாட்டாக்குடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட ஆயத்தக் கூட்டம், மண்மாதிரி பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாட்டாக்குடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட ஆயத்தக் கூட்டம், மண்மாதிரி பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு வேளாண் வட்டாரம், வாட்டாக்குடி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் தரிசு நிலம் கண்டறிதல் கருத்தரங்கம் மற்றும் மண் பரிசோதனை முகாமை தலைஞாயிறு வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா தொடங்கி வைத்தாா். சமச்சீா் உர மேலாண்மை, மண்ணிற்கேற்ற பயிா் தோ்வு செய்தல், நுண்ணூட்டம் இடுதல் குறித்து விளக்கப்பட்டது.

மண் பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மண் பரிசோதனை நிலைய அலுவலா் திவ்யபாரதி விளக்கமளித்தாா். நிகழ்ச்சியில், வேளாண் துணை அலுவலா் வேதரத்தினம், உதவி வேளாண் அலுவலா்கள் நான்சி, காா்த்திகா, கலைவாணி, கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →