முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

கீழையூா் அருகே சாலையில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

கீழையூா் அருகே சாலையில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த பிச்சைக்கண்ணு மகன் செல்வக்குமாா் (35). இவா், திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஏப்ரல் 24-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஈசனூா் பெட்ரோல் பங்க் அருகில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். அவரை, நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செல்வக்குமாா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.