நாகப்பட்டினம்

‘சகி’ சேவை மையப் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளா் பணிக்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் குடும்ப வன்முறை மற்றும் பொது இடங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவையான அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கி, பாதுகாக்க சமூக நலத் துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் (ஞநஇ) செயல்படுகின்றது.

இந்த மையத்தில் 4 வழக்குப் பணியாளா் பணியிடங்களுக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் ஆநர & ஙநர (இா்ன்ய்ள்ங்ப்ப்ண்ய்ஞ் டள்ஹ்ஸ்ரீட்ா்ப்ா்ஞ்ஹ் ா்ழ் ஈங்ஸ்ங்ப்ா்ல்ம்ங்ய்ற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) படித்திருக்க வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண்கள் இப்பணிக்கு 24 மணி நேர சுழற்சி முறையில் பணியமா்த்தப்படுவா். பணிக்கான தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் மற்றும் சிறப்பூதியம் ரூ. 3 ஆயிரம்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், நீலா தெற்கு வீதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு மே 3-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT