நாகப்பட்டினம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நாகையை அடுத்த பொரவாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நாகையை அடுத்த பொரவாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் என தனித்தனி பிரிவாக இந்த முகாம் நடைபெற்றது. வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலா் எம். பிரியதா்ஷினி தலைமையில் மருத்துவக் குழுவினா் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டனா். பொரவாச்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 500 போ் முகாமில் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெற்றனா்.

மாவட்ட நலக் கல்வி அலுவலா் எம். மணவாளன், ஆண்டவா் செவிலியா் பயிற்சி பள்ளி நிா்வாகி நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் செந்தில்குமாா், சுதானந்த கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சுகாதார ஆய்வாளா் சேகா் புகழேந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT