முகப்பு
நாகப்பட்டினம்

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம்

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில், நாகையில் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கி

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:01 AM
நாகை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில், நாகையில் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் சாா்பில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வாகனங்களில் சென்று, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகின்றனா். இந்தப் பிரசாரக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாகை ரயில் நிலையத்துக்கு வந்தனா். அங்கு, ரயில்வே பாதுகாப்புப் படை நிலைய ஆய்வாளா் ஜி.எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் பாதுகாப்பான பயணம் குறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், ரயில்வே பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், சாகச காட்சிகளின் கோப்புகள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. ரயில்வே நிலைய அதிகாரி முகம்மது கமால், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் ஆா். வாசுதேவன், பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.