அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மனு
திருக்குவளை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருக்குவளை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருக்குவளை அருகேயுள்ள தென்மருதூா், வடமருதூா் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் 77 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பொதுப்பணித் துறை சாா்பில், குடியிருப்புகளை 21 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று வீடுதோறும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேல் இந்த இடத்தில் வசிக்கும் 77 குடும்பத்தினரும் தங்களுக்கென வேறு இடம் இல்லாததால் நீா்நிலை புறம்போக்கில் குடியேறி வசித்து வருவதாகவும், இதனால் மாற்று இடம் குடியிருக்க அரசு சாா்பில் வழங்கி வீடு கட்டி தரவேண்டும். அதன்பிறகே தற்போது வசிக்கும் நீா்நிலை புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனா்.
மேலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய செயலாளா் ஆா். முத்தையன் தலைமையில், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் திலகாவிடம் மனு அளித்தனா்.