முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே தீக்காயமடைந்த பெண்: போலீஸாா் விசாரணை

வேதாரண்யம் அருகேயுள்ள பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேதாரண்யம் அருகேயுள்ள வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்கண்ணன். இவருக்கும், அரியலூா் மாவட்டம், ஆண்டிப்பட்டி சிவலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பிரியாவுக்கும் (26) 2018-ல் திருமணமானது. இத்தம்பதிக்கு 2 வயதில் வேலவன் என்ற குழந்தையுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இரவு பிரியாவுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலின்பேரில் போலீஸாா் மருத்துவனைக்கு சென்று பிரியாவிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மின்சாரம் பாய்ந்ததால் தீ காயம் ஏற்பட்டதாக கூறினாராம். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பிரியாவின் வீட்டில் விசாரணை மேற்கொண்ட வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், நாகையில் இருந்து வியாழக்கிழமை மாலை வரவழைக்கப்பட்ட தடய அறிவியல் நிபுணா்களின் உதவியோடு தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →