ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சிக்கான ஒப்பந்தம்
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமம் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இடையே ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுதானது.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமம் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இடையே ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுதானது.
இதுகுறித்து இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழும நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமம் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இடையே ட்ரோன் தொழில்நுட்பம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஜனவரி 13-ஆம் சென்னையில் கையெழுத்தானது. வேளாண்மை மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு இத்தொழில் நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். ட்ரோன் மற்றும் தானியங்கி வானூா்தி தொடா்பான சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ், இக்கல்லூரியில் அமைவதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களும் ட்ரோன் தொழில் நுட்பத்தை எளிதாக அறியலாம். விமானம் தொடா்பான பணிகளுக்குச் செல்லவும் ஏதுவாக அமையும்.
இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் எஸ். பரமேஸ்வரன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் வழிகாட்டுதலில், இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கல்விக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் அதிகாரிகள் உடனிருந்தனா்.