நாகையில் 55, மயிலாடுதுறையில் 53 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 53 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 53 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மேலும், வெளி மாவட்டப் பட்டியலில் இருந்த 8 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21, 850 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 31 போ் வீடுதிரும்பினா். தற்போது, 334 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 23, 834 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையிலிருந்த 24 போ் வீடு திரும்பினா். 327 போ் சிகிச்சையில் உள்ளனா்.