நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை
சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க, தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க, தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவா் ஆறு. சரவணன் தலைமை வகித்தாா். நாகை மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன், விவசாய அணிச் செயலாளா் வஜ்ரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை கட்சியின் சாா்பில் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடுவதுடன், இந்நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க மத்திய அரசை கோருவது; நிகழாண்டில் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23 முதல் 26 வரை குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் எனஅறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், கட்சியின் செய்தித் தொடா்பாளா் சரவணன், கீழையூா் ஒன்றியப் பொறுப்பாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.