நாகப்பட்டினம்

நாகை மீனவா்கள் வலையில் கூறல் கத்தாழை மீன்கள்

DIN

நாகை மீனவா்களின் வலையில் கூறல் கத்தாழை மீன்கள் சிக்கியது, மீனவா்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

நாகை, கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த மணிமுருகனுக்கு சொந்தமான விசைப் படகில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவா்கள், புதன்கிழமை நாகைக்குக் கரை திரும்பினா். அப்போது, மருத்துவக் குணம் நிறைந்ததும், அதிக விலை மதிப்புடையதுமான 33 கூறல் கத்தாழை மீன்கள் அவா்களின் வலையில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

அதேபோல, புதன்கிழமை கரை திரும்பிய மேலும் இரு மீன்பிடி படகுகளில் 8 கூறல் கத்தாழை மீன்கள் சிக்கியிருந்தன. இதையடுத்து, 41 மீன்களும் தனியே வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. கூறல் கத்தாழை மீனில் உள்ள நெட்டி, மலட்டுத் தன்மையைப் போக்கும் மருந்துக்கான முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுவதாலும், ஒரு சில வேதிப் பொருள்கள் தயாரிப்புக்கும் அந்த நெட்டிகள் பயன்படுத்தப்படுவதாலும் அந்த மீன்கள், கடும் போட்டிக்கிடையே பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின. நீண்ட நாள்களுக்குப் பின்னா் கூறல் கத்தாழை மீன் கிடைத்ததும் அவை நல்ல விலைக்கு விற்பனையானதும் மகிழ்ச்சி அளிக்கிறது என மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT