நாகப்பட்டினம்

வேதாரண்யம் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் குருகுலம் பள்ளி மாணவியா் விடுதியில் வியாழக்கிழமை காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வேதாரண்யத்தில் செயல்படும் அரசு உதவிபெறும் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் 300-க்கும் மேற்பட்டவா்கள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். வழக்கம்போல, வியாழக்கிழமை காலை உணவு சாப்பிட்டவா்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சிகிச்சைக்கு பின்னா் மாணவிகள் விடுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாணவிகள் சாப்பிட்ட காலை உணவில், பல்லி விழுந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வேதாரண்யம் அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், கோட்டாட்சியா் மை. ஜெயராஜபௌலின் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாணவா்களிடம் உடல்நலன் குறித்தும், உணவில் ஏற்பட்ட பிரச்னை குறித்தும் விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT