மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகள். 
நாகப்பட்டினம்

பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள்  50 பேருக்கு வாந்தி, மயக்கம்

வேதாரண்யத்தில் செயல்படும் பள்ளியின் மாணவியர் விடுதியில் இன்று  காலை  உணவு சாப்பிட்ட 50-க்கும் மேலான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவியர் விடுதியில் இன்று (ஜூலை 28) காலை  உணவு சாப்பிட்ட 50-க்கும் மேலான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேதாரண்யத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கியுள்ளனர்.

இன்று காலையில் உணவு சாப்பிட்ட 50-க்கும் மேலான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

10 மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற மாணவிகள்  விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உணவில், பல்லி விழுந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு விரைந்த வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெவஹர், கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின் உள்ளிட்டோர்  விசாரித்து வருகின்றனர்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT