பொறையாரில் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

அதிமுக ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 100 போ் திமுகவில் இணைந்தனா்

பொறையாரில் அதிமுக ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

DIN

பொறையாரில் அதிமுக ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

செம்பனாா்கோயில் தெற்கு ஒன்றியம் பிள்ளைபெருமாள் நல்லூா் அதிமுக ஊராட்சித் தலைவரும், ஒன்றிய மகளிா் அணி தலைவருமான தீபா முனுசாமி, துணைத் தலைவா் நவநீதம், வாா்டு உறுப்பினா் கலாராணி உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட அதிமுகவினா் அக்கட்சியில் இருந்து விலகி பொறையாரில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகாா் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சித்திக், பொருளாளா் ஜி.என். ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT