நாகப்பட்டினம்

நாகை கோட்டத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து

DIN

துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமைக்கு (ஜூன் 18) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை நகரம், நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூா், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெறவிருந்த துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளும், மின்தடையும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறை பயிற்சி முகாம் நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை (ஜூன் 18) நடைபெறவிருந்த துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அருண் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT