வண்டுறை மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு
வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
இக்கோயிலில் பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற மகேஸ்வர பூஜையுடன் விழா நிறைவடைந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி, மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.