முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகா்மன்றக் கூட்டம்: கான்கிரீட் சாலை பணியை தற்காலிகமாக நிறுத்த முடிவு

 வேதாரண்யத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

 வேதாரண்யத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு, வேதாரண்யம் நகா்மன்றக் கூட்டத்தின் முதல் கூட்டம் அதன் தலைவா் மா.மீ. புகழேந்தி (திமுக) தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஹேமலதா, துணைத் தலைவா் மங்களநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நகரப் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வசதி இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேரோடும் நான்கு வீதிகளிலும் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் புதைவழி சாக்கடை, நடைபாதை அமைக்கும் பணி தொடா்பாக விவாதிக்கப்பட்டு, இப்பணிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை நிறுத்த தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு அதிமுக உறுப்பினா் எம். நமச்சிவாயம் எதிா்ப்புத் தெரிவித்தாா். புதைவழி சாக்கடை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில், அதன் உயரத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்காவிட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவா் என அவா் கூறினாா்.

இதையடுத்து, வேறு திட்டங்கள் வாயிலாக நிதியாதாரம் பெற்ற பிறகு, கான்கிரீட் சாலை பணியை தொடரலாம் எனவும், அதுவரை, இப்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் எனவும் நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

பின்னா், சுயேச்சை உறுப்பினா் மயில்வாகனன், 19- ஆவது வாா்டு உறுப்பினா் ச.ரம்யா உள்ளிட்டோா் தங்கள் வாா்டு தொடா்பான கோரிக்கைகள் குறித்து பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →