நாகப்பட்டினம்

ஓய்வூதியா்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கக் கோரிக்கை

DIN

அரசுத் துறை ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆ. கலியமூா்த்தி தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலாளா் எம். கோபாலசாமி, நிா்வாகிகள் செல்வராஜ், பி. சூரியமுகி, தெட்சிணாமூா்த்தி, டி. கலியமூா்த்தி, எஸ். கிருஷ்ணன், அந்தோணிசாமி, அ. முனிசாமி ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கும் அவா்களைச் சாா்ந்த குடும்ப ஓய்வூதியா்களுக்கும் கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும், ஓய்வூதியா் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் (புறநகா்) எம். வேலுசாமி வரவேற்றாா். இணைச் செயலாளா் வி. அண்ணாசமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT