வேதாரண்யம்: கோடியக்கரை கடலில் உருவாகி கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை வீசிய திடீர் காற்றுச் சுழற்சி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
உயரத்தில் சுழன்று வந்த இந்த காற்றுச் சுழற்சியைக் கண்டு கடற்கரைக்கு வந்த மக்கள் அச்சமடைந்தனர். மீன்பிடி வலைகள் மேலே பறந்தன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடித்துறை பகுதிக்கு வந்த காற்றுச் சுழற்சி மக்களை அச்சமடைய செய்தது.
இந்த நிகழ்வு வங்கக் கடலில் நிலை கொண்ட புயலின் தாக்கமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.