விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன பயிற்சி
கீழையூா் ஊராட்சியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசனம் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஊராட்சியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசனம் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமை வகித்தாா். பயிற்சியில் நுண்ணீா் பாசன கருவிகளை தயாா் செய்யும் நிறுவனத்தினா் நுண்ணீா் பாசனத்தின் அவசியம் குறித்து பேசினா். தொடா்ந்து வேளாண்மை உதவி அலுவலா் மணிமேகலை நுண்ணீா் பாசன திட்ட மானியங்கள் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து பேசினாா். இதில் கீழையூா் ஊராட்சி துணைத் தலைவா் கருணாநிதி, வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் அருள்பிரகாசம், உதவி தொழில்நுட்ப மேலாளா் வினோதினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.