கோடியக்கரைக்கு அப்பால் மீன் பிடித்த மீனவர்களின் பொருள்களை பறித்த இலங்கை வாசிகள்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது, பொருள்களை கொள்ளையடித்த
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது, பொருள்களை கொள்ளையடித்த இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்களால் விரட்டியடித்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 14 பேர் இன்று (மார்ச் 28) முற்பகலில் கரை சேர்ந்தனர்.
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து மயில்வாகனன், சிவபாலன் ஆகியோருக்கு சொந்தமான 3 கண்ணாடியிழைப் படகுகளில் 14 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
அன்று இரவு ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மீனவர்கள் படகுகளில் ஏறி தாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினராம். மீனவர்கள் வைத்திருந்த செல்லிடபேசிகள், ஜிபிஎஸ் கருவிகள், டீசல், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
விரட்டியடித்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 14 பேரும் கரை சேர்ந்தனர். கடலோரக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.