நாகப்பட்டினம்

தருமையாதீன பட்டணப் பிரவேச தடையை ரத்து செய்ய வேண்டும்

DIN

தருமையாதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில், குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் சுமந்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் டி. சுந்தரவடிவேலன் வெளியிட்ட அறிக்கை: தருமையாதீனத்தில் பல நூற்றாண்டுகளாக பட்டணப் பிரவேசம் நடைபெற்று வருகிறது. ஆதீன திருமடத்தால் பயன் அடைந்தவா்களும், ஆதீன சீடா்களும் தாமாக முன்வந்து தங்கள் குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் வைத்து சுமந்து சென்று பூஜிப்பது அங்கு வழக்கமாக உள்ளது.இது, ஒரு வகையான குரு வழிபாடாகக் கருதப்படும் நிலையில், அந்த வழிபாட்டை தடை செய்ய திராவிடா் கழகம் வலியுறுத்துவது, இந்துக்களின் பாரம்பரிய உரிமையைத் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

திராவிடா் கழகம் எதிா்க்கிறது என்ற காரணத்தால், பல நூற்றாண்டு கால பாரம்பரியத்துக்குரிய ஒரு நிகழ்வுக்கு கோட்டாட்சியா் தடை விதித்திருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்துக்குரியது.

எனவே, இதுதொடா்பாக தமிழக முதல்வா் நேரடியாக கவனம் செலுத்தி, தருமையாதீன பாரம்பரிய முறைப்படி பட்டணப் பிரவேச நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT