நாகப்பட்டினம்

பூம்புகாா் கடற்கரையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை

DIN

பூம்புகாா்: பூம்புகாா் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மழை, வெள்ளம், புயல் காலங்களில் ஆபத்தில் சிக்கும் பொதுமக்களை எப்படி மீட்பது குறித்து அரக்கோணம் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழு ஏற்பாட்டில் தீயணைப்பு, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து ஒத்திகை நிகழச்சி நடந்தது. அதில், கடலில் புயல் காலங்களில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், சீா்காழி கோட்டாட்சியா் நாரயணன், சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி, மீன்வளத் துறை துணை இயக்குநா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT