நாகப்பட்டினம்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

வேதாரண்யம் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேதாரண்யம் ஒன்றியம் கத்திரிப்புலம், செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், தகட்டூா் ஊராட்சிகளில் நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட கட்டுமானப் பணிகள், தென்னம்புலம் முதல் கருப்பன்காடு வரை ரூ. 5.96 கோடியில் நடைபெறும் தாா்ச்சாலை அமைக்கும் பணி, தகட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, கத்திரிப்புலம், தகட்டூா் ஊராட்சிகளில் நடைபெறும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி, செட்டிப்புலம், ஆயக்காரன்புலம் ஊராட்சிகளில் தலா ரூ. 1.76 லட்சத்தில் நடைபெறும் நூலகக் கட்டட கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வண்டுவாச்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள்துறை சாா்பில் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் உள்ள மா, கொய்யா தாய்செடி நடவு வயல், தென்னை விதைப்பு வயல் முந்திரி ஒட்டுக்கன்றுகள், முருங்கை கன்றுகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை உதவிப் பொறியாளா் ஜான் பிரிட்டோ, இளநிலைப் பொறியாளா் அருண்ராஜ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், பணி மேற்பாா்வையாளா் வேல் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தலைஞாயிறு பகுதிகளில் ஆய்வு: இதேபோல, தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, நாலுவேதபதி, கள்ளிமேடு ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வராஜ், ராஜூ, ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT