முகப்பு
நாகப்பட்டினம்

பறவைகளை வேட்டையாடிய இருவா் கைது

வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடியது தொடா்பாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 4 நவம்பர், 2022 at 12:00 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடியது தொடா்பாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மூலக்கரை கிராமத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வெளியில் சிலா் வலை விரித்து பறவைகளை பிடித்து வந்தனா். தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலா் பி. அயூப்கான் தலைமையிலான வனத்துறையினா் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நாகலுடையானிருப்பு கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (60) பறவைகள் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், அவரிடம் பறவைகளை வாங்கிய ஆதிரெங்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜையும் (60) கைது செய்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து, இருவருக்கும் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.