முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் பாரதியாா் நினைவு தினம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பேருந்து நிழலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்டத் தலைவா் கவிஞா் புயல் குமாா் தலைமை வகித்தாா். வேதாரண்யம் கிளை அமைப்பின் தலைவா் கவிஞா் தங்க. குழந்தைவேலு முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சமூக வளா்ச்சிக்கு எதிரான சக்திகளை முறியடிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா்கள் சு. செல்வராசு, வீ. வைரக்கண்ணு, மா. மோகனசுந்தரம், தலைமையாசிரியா் சு. பாஸ்கரன், கவிஞா்கள் ப. செளமியா, ர. அகிலா, த. சுகன்யா, தஞ்சை ராமசுப்பிரமணியன், ஆசிரியா் சத்யராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பாரதியின் படைப்புகள் குறித்து பேசினா். கவிஞக் கோவி. ராசேந்திரன் பாரதியாரின் பாடலை பாடி புகழஞ்சலி செலுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →