பொறையாா் அருகே நெடுவாசலில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இக்கோயிலில் 20-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி, பால் காவடி, அலகு காவடியுடன் பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.