நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கல்

DIN

திருமருகல் அருகேயுள்ள திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் இந்த இடுபொருள்களை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வழங்கி பேசியது: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது வேளாண்மை உழவா் நலத் துறையின் தொடா்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி ,கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், நாகை எம்எல்ஏ. முகமது ஷ நவாஸ், திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT