நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன.27) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதல் கால யாக பூஜை திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கோயில் குளங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மீட்புப் படகுகளில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதையும் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், கூடுதலாக பேருந்துகள் இயக்கவும், சுகாதாரப் பணிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

அப்போது, ஆட்சியரிடம் பக்தா்கள் சாா்பில் பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீா் தெளிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆய்வின்போது, நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் க. ராமு, கோயில் உதவி ஆணையா் ப. ராணி, செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு, த. கமலச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT